Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியை அசால்டா தூக்கி சாப்பிட்ருவேன்.. அதுக்கு சவால் விட்டாரா விஜய்?

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்கள் அசராமல் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்போதும் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு அப்படியேதான் இருக்கிறது. முதல்நாள் முதல்காட்சிக்கு கூடும் கூட்டமே அவரது மாஸ் பற்றி சொல்லும்.

அதேபோல் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகராக உயர்ந்துள்ளார் தளபதி விஜய். கடந்த சில படங்களில் மிகப்பெரிய வசூலை வாரி குவித்துள்ளார்.

தற்போது விஜய் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்கும் தான் சினிமா மார்க்கெட்டில் பெரிய போட்டியே இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அவர் கட்சி சம்பந்தமான எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

vijay-rajini-cinemapettai

vijay-rajini-cinemapettai

இந்நிலையில் தளபதி விஜய், ரஜினி அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவரை மிஞ்சி விடுவேன் என்று கூறியதைப் போல ஒரு பத்திரிகை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரஜினியுடன் நேரடியாக மோத தயார் என்று விஜய் சவால் விட்டதாக முன் பக்கத்திலேயே போட்டுவிட்டனர். இதனை பார்த்த இருதரப்பு ரசிகர்களும் கொந்தளிப்பில் இருக்கின்றன.

தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top