7 நாட்களில் 5 சர்ச்சைகளில் சிக்கிய விஜய்.. அடுத்தடுத்து விழும் பெரும் அடி

தளபதி விஜய்க்கு கெட்ட நேரம் பிடித்து ஆட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். வாரத்திற்கு ஒரு பிரச்சனை போய் இப்போது வாரத்தில் 5 பிரச்சனையில் சிக்கி வருகிறார். முதல்முறையாக தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் விஜயின் வாரிசு படம் உருவாகிறது.

ஆரம்பத்தில் வாரிசு படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆவதால் கடும் கோபத்தில் விஜய் படக்குழுவை திட்டினார். தெலுங்கு சினிமாவில் பொங்கல் பண்டிகைக்கு அங்குள்ள பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவித்தனர்.

Also Read : ரொம்ப சீக்ரெட்டாய் விஜய் சேதுபதியை வளைத்து போட்ட நடிகை.. ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி வரிசையில் தெறிக்க விடும் அம்மணி

இது தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் எல்லா மொழியிலும் இவ்வாறு தான் வழக்கத்தில் உள்ளது. விஜய் இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்குள் அடுத்த பிரச்சனை காத்திருந்தது. அஜித்தின் துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவி கைப்பற்றுள்ளதால் இப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் உதயநிதி பேசுவதில் இரண்டும் பெரிய நடிகர்கள் என்பதால் இருவருக்குமே சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்ற கூறி இருந்தார். இது ஒரு வழியாக சுமுகமாக முடிய அடுத்தடுத்த பிரச்சனை தலைதூக்கியது. அதாவது சமீபத்தில் விஜய் தனது ரசிகர் மன்றத்தை கூட்டி இருந்தார்.

Also Read : துப்பாக்கிகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட விஜய்.. தளபதி 67 போஸ்டரால் அதிர்ச்சியில் உறைந்த லோகேஷ்

அப்போது ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் காலில் விழுந்து விஜய் ரசிகர்கள் வழங்கினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே விஜய் தனது காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த நாளே படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட யானைகள் அனுமதி வாங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற செய்தியாளர்களை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்த பிரச்சனைகள் விஜயை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறது.

Also Read : காலை வாரிவிட்ட விஜய்.. நான் இருக்கிறேன் என கைதூக்கி விட்ட தனுஷ்

Advertisement Amazon Prime Banner