Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapathy-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் விசேஷத்துக்கு வந்ததால் போலீஸ் விசாரிச்சாங்க.. பரபரப்பைக் கிளப்பிய காமெடி நடிகர்

தளபதி விஜய் பிரபல நடிகரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டதற்காக போலீசார் அவரை விசாரித்ததாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.

சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் தளபதி விஜய்யுடன் ஒரே ஒரு படத்தில் நடித்தவர்தான் ரமேஷ் கண்ணா.

விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா ஆகியோர் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றிப்படம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் என்பவர் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்துள்ளார்.

அப்போது தனக்கு திருமணம் என பத்திரிக்கையை வைத்ததால் ரமேஷ் கண்ணாவின் நட்பு பாராட்டிய விஜய் அவர்களது திருமணத்திற்கு வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் செம வைரலானது அனைவருக்கும் தெரிந்தது.

விஜய் வந்ததால் ஏகப்பட்ட ட்ராபிக் ஏற்பட்டு அந்த ஏரியாவே ஸ்தம்பித்த நிலையில் காவல்துறையினர் ரமேஷ்கண்ணாவை கூப்பிட்டு அட்வைஸ் கூறியது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாம்.

vijay

vijay

Continue Reading
To Top