Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென ரசிகர் வீட்டுக்கு போன் பண்ணிய தளபதி விஜய்.. காரணம் இதுதான்!

தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதிலும் அவருக்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தலைவா படத்தின் போது பார்த்தோம்.

அது படத்துக்காக. ஆனால் தற்போது தளபதி விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு இறந்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதை தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வந்தனர். பாலா என்ற பெயர் வைத்த அந்த இளைஞர் காதலில் தோல்வி அடைந்ததால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.

பகல் நேரத்தில் இந்த காரியத்தை அந்த இளைஞர் செய்ததால் வீட்டில் இருப்பவர்கள் கதவை சாத்திவிட்டு தூங்குகிறார் என நினைத்து விட்டார்களாம். மாலையில்தான் அவர் தூக்கு போட்டது தெரியவந்துள்ளது.

இன்று காலையில் இருந்து தளபதி ரசிகர்கள் மற்றும் பல நடிகர் நடிகைகள் தங்களுடைய இரங்கலை அந்த ரசிகர் குடும்பத்திற்கு தெரிவித்து வந்தனர்.

vijay-fan-bala

vijay-fan-bala

இந்நிலையில் தளபதி விஜய் நேரடியாக அந்த இளைஞரின் வீட்டுக்கு கால் பண்ணி நலம் விசாரித்துள்ளார். மேலும் அந்த குடும்பத்திற்கு சிறு உதவி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Continue Reading
To Top