Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பிறந்தநாளில் அவர் பற்றி தெரியாத சில சுவாரசிய தகவல்கள்

sarkar

விஜய் பிறந்தநாளில் அவர் பற்றி தெரியாத சில சுவாரசிய தகவல்கள்

தமிழ் சினிமாவின் ஹாட் ஹிட் நாயகன் தளபதி விஜயின் 44வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள் செம குஷியாக இந்நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பிறந்தநாள் நாயகன் குறித்து தெரியாத சில சுவாரசிய தகவல்களும் வைரலாக பரவி இருக்கிறது.

`வசந்தராகம்’ படத்தில் விஜய் சிறு வயது விஜயகாந்தாக நடித்து இருந்தார். ஒரு காட்சியில் தாலி கட்ட வேண்டும். அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆக்‌ஷன் சொல்லியும் விஜய் தயங்கியே நின்றாராம். அதன்பிறகு, அவர் இதெல்லாம் தான் சினிமா. சும்மா நடி என சொல்லிய பிறகே நடித்ததாக கூறப்படுகிறது.

விஜயிற்கு சிறு வயது முதலே ஊசி என்றால் செம பயம். அடிப்பட்டு ரத்தம் வந்தால் கூட அதற்கு அழுகாமல் ஊசிக்கு கத்துபவர் தளபதி. `செந்தூரப்பாண்டி’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் ஒரு கண்ணாடியை மோதி உடைக்கிற மாதிரி சீன் இருந்தது. இளம் ரத்தம் என்பதால் டூப் போடாமல் நடித்தார். அவரை விஜயகாந்த் அழைத்தார். பாராட்டப் போகிறார் என நினைத்து போன விஜயை செம டோஸ் விட்டு இருக்கிறார். சின்னக் கண்ணாடி பீஸ் கண்ணுக்குள்ள போனாலும் நடிகனை நம்பி பணம் போட்டவங்க நிலைமை என்னாகும்? நடிகனுக்கு உடம்புதான் மூலதனம் என திட்டி தீர்த்து இருக்கிறார்.

மகன் பிறந்ததை விட மகளின் பிறப்பை தான் அதிகமாக நேசிப்பவர் விஜய். அவர் தங்கை திவ்யா திடீரென இறந்ததும், நிலை குழைந்து போனார். அந்தசோகத்தை துடைக்க வந்தவரே மகள் ஷாஷா. என் குட்டிப் பொண்ணோட ஒரு சிரிப்பைப் பார்த்துட்டா போதும். உடம்புல புதுசா ரத்தம் பாயும் என பெருமை பேசுபவர். ஒருமுறை, விஜயிற்கு கால் செய்த எஸ்.ஏ.சி தயாரிப்பாளராக உனக்கு போன் செய்கிறேன். `அத்தன் ஒக்கடு’னு ஒரு தெலுங்குப் படம் பார்த்தேன். அதை தமிழில் தயாரிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க கால்ஷீட் கிடைக்குமா?’ எனக் கேட்டிருக்கிறார். அப்பா பாதையில், பார்க்காமல் எப்படி ஓகே சொல்வது சார் என போனை வைத்து இருக்கிறார். சிறிது நேரத்தில் கால் செய்தவர் நான் ரெடி சார் எனச் சொல்ல, அப்படி உருவானதுதான் `ஆதி’ திரைப்படம்.

விஜய் ரஜினியின் வெறித்தனமான ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவரை போல அமிதாப் பச்சன் மீதும் அதிகம் பிரியம் கொண்டவர். `ஷோலே’ படத்திலிருந்து அவர் மீது விஜயிற்கு தனி கிரேஸ் இருப்பதாக தெரிகிறது.

நெகடிவ் கதாபாத்திரத்தில் இவர் நடித்த ப்ரியமுடன் படத்தை பார்த்த அம்மா ஷோபனா. இனி இந்த கதாபாத்திரங்களில் நடிக்காதே என தெரிவித்து இருக்கிறார். அம்மாவின் அன்புக்காக, விஜய் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிப்பதில்லை. அம்மா ஷோபனா இவரை செல்லமாக ஜோவென அழைப்பார்.

விஜயிற்கு பேப்பரை பின் பக்கத்தில் இருந்து புரட்டுவது தான் வழக்கம். அதுகுறித்து, தந்தை கேட்டப்போது முதல் பக்கத்தில் வரும் அளவுக்கு நான் இன்னும் உயரவில்லை எந்த் தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top