விஜய் பிறந்தநாளுக்கு இந்த முறை கீர்த்தி சுரேஷ் கொடுக்க இருக்கும் பரிசு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

keerthi suresh
keerthi suresh

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார், நடிகை மேனகாவின் மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். கோலிவுட்டில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்ரியாக நடித்து வருகிறார். இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கிலும் மகாநடி என்ற பெயரிலும் உருவாகி இருக்கிறது. நடிப்பில் பிஸியாக இருந்தாலும், கீர்த்திக்கு டிசைனிங்கிலும் ஆர்வம் அதிகம் என அடிக்கடி கூறி இருக்கிறார். ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவதை பொழுதுபோக்காக கொண்டு இருக்கிறார்.

இவர் விஜயின் கடந்த பிறந்தநாளுக்கு தன் கைப்பட வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுத்தார். விஜயின் பேவரிட்டான போஸில் இருக்கும் இந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். பெரும்பாலான, நடிகர்களுக்கு கொடுக்கப்படும் பரிசுகள் எங்கு இருக்கும் என அவர்களுக்கே தெரியாது. சமீபத்தில், பார்த்திபன் தன் மகள் கீர்த்தனாவின் திருமண அழைப்பிதழை விஜயை சந்தித்து நேரில் அளித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான். காரணம், கீர்த்தி கொடுத்த இந்த ஓவியம் விஜய் வீட்டின் வரவேற்பறையில் மாட்டப்பட்டு இருந்தது. இது பல தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றது.

keerthi suresh
keerthi suresh

இந்நிலையில், விஜயின் பிறந்தநாளுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் ஒரு பக்கம் தயாராகி வருகிறார்கள். அதே வேளையில், ஒரு தரப்பு இந்த முறை கீர்த்தி என்ன பரிசு கொடுக்க இருக்கிறார் என ஆர்வத்தில் உள்ளனர். இதுகுறித்து, சமீபத்திய பேட்டியில் கீர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கீர்த்தி, தெரியவில்லை. இனிமேல் தான் யோசிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அட என்னம்மா கொடுக்கப்போறீங்க?

பைரவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த கீர்த்தி, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திலும் ஜோடி போட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.