Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் ட்ரைலரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்.. இன்னும் அதிக உயரம் சென்ற விஜய்
வந்ததும் வந்தது பிகில் ட்ரைலர். வெளிவந்த சில மணிநேரங்களில் சாதனை படைத்தாலும் அதைவிட பிகில் ட்ரைலரை கலாய்த்து தள்ளியவர்தான் அதிகம். பிகில் டிரைலரை கண்கொத்தி பாம்பாக பார்த்த நெட்டிசன்கள் அதில் உள்ள சில முக்கியமான காட்சிகளை மற்ற படங்களுடன் ஒப்பிட்டு இது காப்பி எனவும், அதில் விஜய் பழைய கெட்டப்பில் வந்து ‘பிகிலு’ என்ற வசனத்தை ஆடு, மாடு, கழுதை, விக்ஸ் மாத்திரை உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளியுள்ளனர்.
பிகில் டிரைலரை விட இவர்கள் கலாய்த்து வெளியிட்ட வீடியோக்கள்தான் அதிகம் பரப்பப்பட்டது. இதைப் பார்த்து கோபம் கொள்வதா இல்லை சிரிப்பதா என விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள். பிகில் படத்திற்கு பல சாதனைகள் இருந்தாலும் அது தலைவலியாக மாறியுள்ளது.
ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வார்த்தைகள் ஆளும் கட்சிக்கு சங்கடமாக உள்ளது. இந்நேரத்தில் பிகில் படத்தின் கதை என்னுடையது என செல்வா என்ற உதவி இயக்குனர் வழக்கு போட்டுள்ளார். இந்த படத்திற்கு பட்ஜெட் அதிகமாக செலவு செய்ததால் தயாரிப்பாளருக்கு மன அழுத்தம்.
இன்னும் படத்தின் பணிகள் நிறைவு பெறாததால் தீபாவளிக்குள் முடிந்துவிடுமா என்ற ஒரு பக்கம் பயம். ஆளும் கட்சி சும்மா இருக்குமா? பிகில் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் சிக்கல்களும் தீபாவளிக்கு முன்தினம் தெரிந்துவிடும். ஆனாலும் விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை மிகபெரிய அளவில் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. கண்டிப்பாக முதல் நாள் மொத்த வசூல் 100 கோடியை தொடும்.
காட்டுத்தனமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய்யை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அவர் மேலே மேலே வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார். அதற்கு பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு வந்த கூட்டமே ஒரு சான்று.
