fbpx
Connect with us

Cinemapettai

விஜய்க்கு பைக் ஓட்ட தெரியாது.. சம்மட்டி அடி கொடுத்த பிகில் பட சூட்டிங் ஸ்பாட் வீடியோ.. வைரல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு பைக் ஓட்ட தெரியாது.. சம்மட்டி அடி கொடுத்த பிகில் பட சூட்டிங் ஸ்பாட் வீடியோ.. வைரல்

தமிழ்சினிமாவில் நட்சத்திர அந்தஸ்து இருந்தால் சுமாரான படங்கள் கூட கோடிக்கணக்கில் வசூல் செய்யும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் தளபதி விஜய். விஜய் என்ற ஒற்றை பெயருக்காக சுமாரான கதை கொண்ட பிகில் படம் சுமார் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அட்லீ இதற்கு முன் இயக்கிய தெறி, மெர்சல் ஆகிய படங்கள் கமர்ஷியலாக வேற லெவலில் இருந்தன. ஆனால் பிகில் திரைப்படத்தில் திரைக்கதை சற்று சறுக்கியது. அதுமட்டுமல்லாமல் படத்தின் முதல் பாதியை இழு இழு என இழுத்து ரசிகர்களைக் கடுப்படைய வைத்து விட்டார்.

ஆனால் இரண்டாம் பாகம் போன ஸ்பீடு தெரியவில்லை என்கிறார்கள் பலர். எது எப்படியோ ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பிகில் திரைப்படம் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. பிகில் படத்தில் தளபதி விஜய் பைக் ஓட்டுவது போன்ற காட்சி ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.

அதை விஜய் டூப் போட்டுதான் எடுத்தார் என விஜய்யை பிடிக்காதவர்கள் இவ்வளவு நாட்களாக கூறி வந்தனர். அதுமட்டுமல்லாமல் பைக் ஸ்டண்ட் காட்சிகளை விஜய் ஒரிஜினலாக செய்ய மாட்டார் எனவும் பல காலமாக வதந்திகள் இருந்தது.

அதனை பொய்யாக்கும் விதமாக தற்போது பிகில் படத்தில் விஜய் பைக் ஸ்டன்ட் செய்த வீடியோ வெளியாகி தளபதி ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. மேலும் பைக் ஓட்ட தெரியாது எனக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

விஜய் பைக் ஸ்டண்ட் வீடியோ 

சும்மாவே விஜய் ரசிகர்கள் ஆடுவார்கள், சலங்கையை வேற கட்டிவிட்டால் கேட்கவா வேணும்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top