Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் படுமொக்கை படமான பைரவா படைத்த பிரமாண்ட சாதனை.. இதுதான் மாஸ்!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை தளபதி விஜய்க்கு பொங்கல் ரிலீஸ் எவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை. பத்தாததற்க்கு இந்தமுறை விஜயுடன் கார்த்தி மீண்டும் மோதுகிறார்.

இது ஒரு புறமிருக்க தளபதி விஜய்யின் படு மொக்கை படமான பைரவா படம் ஒரு பிரமாண்ட சாதனையை செய்துள்ளது அவரது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்த திரைப்படம் பைரவா. ஆனால் பைரவா படம் ஹிந்தி டப்பிங் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளது.

ஒரு தோல்விப்படம் மற்ற மொழிகளில் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்துவது அந்த நடிகரின் சமீபத்திய மார்க்கெட் நிலவரத்தை அப்பட்டமாக காட்டுகிறது.

மெர்சல், சர்க்கார், பிகில் போன்ற படங்களின் மூலம் வட இந்தியாவிலும் விஜய்க்கு கணிசமாக ரசிகர் கூட்டம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

vijay-cinemapettai

vijay-cinemapettai

Continue Reading
To Top