விஜய்க்காக செய்யும் சிவகார்த்திகேயன்.. பீஸ்ட் நியூ அப்டேட்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஜோராக நடைபெற்று வருகிறது. நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

பொதுவாக விஜய் படத்தில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேபோல் பாடல்கள் சிறப்பாகவும் இருக்கும். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தப் படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது பீஸ்ட் படத்தின் இசையமைப்பை அனிருத் மேற்கொண்டுள்ளார். எனவே படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்சன் மற்றும் அனிருத் இடையில் மேக்கிங் வீடியோ ஒன்றும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக டாக்டர் படத்தின் பாடலிலும் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன்

sivakarthikeyan-01
sivakarthikeyan-01

ஆகியோர் இணைந்து நகைச்சுவை கலந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. எனவே பீஸ்ட் படத்தின் பாடலுக்கும் சிறப்பான மேக்கிங் வீடியோவை அளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்