விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் தற்போது விஜய் ரசிகர்கள்மகிழ்ச்சியில் உள்ளனர். பீஸ்ட் படத்தில் விஜய் ரசிகர்கள் தாண்டி, பல பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர். பல நடிகர்களும் பீஸ்ட் படம் வெளியாக இருப்பதால், தாங்கள் நடித்த படங்களை வெளியிட தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய், பீஸ்ட் படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சியில் நடித்துள்ளதாகவும் காட்சிக்கு காட்சி ஆக்ஷனில் மிரட்டுவதாகவும் படத்தின் சண்டை இயக்குனர்கள் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளனர். மேலும் விஜயின் நடனம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என ஜானி மாஸ்டர் கூட தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு விஜய் படத்தில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டதாக படக்குழுவினர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து வருகின்றனர்.
விஜயின் நடனத்திற்கும் நடிப்பிற்கும் எப்படி ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் அவருடைய குணத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்த ஒரு இடத்திலும் தனது ரசிகர்களை விட்டுக்கொடுக்காமல் இருப்பார். சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கூட தன் ரசிகர்கள் மேல் கை வைக்க கூடாது எனவும் சூசகமாக கூறியிருந்தார். அந்த அளவிற்கு விஜய் தனது ரசிகர்கள் மீது அன்பாக உள்ளார்.
பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்துள்ள ஷைன் டாம் சாக்கோ விஜய் பற்றி அவரது அம்மாவிடம் பெருமிதமாக கூறியுள்ளார். அதாவது விஜய் சார் மிகவும் அமைதியான மனிதர் அவருக்கு எல்லாம் கோபமே வராது அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது அம்மா விஜய்யை பார்க்க ஆசைப்பட்டு உள்ளார். இதனால் பீஸ்ட் படப்பிடிப்பின் போது அவரது அம்மாவை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது ஷைன் டாம் சாக்கோ, விஜய்யை பார்த்து உங்களுக்கு கோபம் வராதா நீங்கள் அமைதியான மனிதரா என கேட்டுள்ளார். அதற்கு விஜய் நானும் சாதாரண மனிதன் எனக்கும் கோபம் வரும் அதனைக் கட்டுப் படுத்திக் கொள்வேன் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். அது மட்டும் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக இருப்பதை விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.