Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் பைரவா இயக்குனரின் அடுத்த படத்தின் தகவல்.!
விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் அறிவித்துள்ளார்கள், மேலும் விஜய்-அட்லி படம் முடிந்த பிறகு விஜய் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் தீயாய் பரவி வந்தது ஆனால் அது உறுதியான தகவல் இல்லை.
விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் பைரவா அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி பைரவா படத்தில் தான் இணைந்தது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். பைரவா படத்தில் மருத்துவ கல்லூரியில் நடக்கும் ஊழலை பற்றி கதை இருந்தது,
இந்த படத்திற்கு பிறகு பரதன் அடுத்த கதைக்கான வேலைகளில் இறங்கினார் தற்பொழுது கதை ரெடியாகி விட்டதாம், இந்த கதைக்காக பரதன் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டதால் கதைக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தமிழ் தெலுங்கில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கப் போவது யார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
