விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பலர் ஆதரவை தட்டி சென்ற ஓவியா, விஜய் டெலி அவார்ட்ஸை மிஸ் செய்ததால் ஓவியா ஆர்மியினர் சோகத்தில் உள்ளனர்.

bigg-boss-vote

பிரபல தொலைக்காட்சியான விஜய் ஆண்டுதோறும் அதன் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளுக்கு விருது கொடுத்து சிறப்பித்து வருகிறது. தொடர்ந்து, 3 வருடங்களாக விருதுகள் கொடுக்கப்பட்ட நிலையில், 4வது விஜய் டெலி அவார்ட்ஸ் சமீபத்தில் நடைபெற்றது. இதில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், விஜய் டிவியின் பெருமை (Pride of the Channel) என பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விருது அளிக்கப்பட்டது. இந்தியில் பட்டி தொட்டியெல்லாம் பட்டை கிளப்பிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் தமிழில் தொடங்கப்பட்டது. நமீதா, கணேஷ் வெங்கட் ராமன், ஓவியா, ஆர்த்தி, காயத்ரி ரகுராம், பரணி, கஞ்சா கருப்பு, வையாபுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரம்பித்த முதல் நாளில் இருந்து ஒருபுறம் எதிர்ப்பை சந்தித்தாலும், மறுபுறம் அமோக ஆதரவை பெற்றது.

ஆரம்பம் முதலே ஓவியா, தன் குழந்தை தனத்தால் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். ரசிகர்களுக்கு ஆர்மி என்ற அடைமொழி புதிதாக உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தது. சீரியல் பார்த்த மைண்ட் சும்மா இருக்குமா?. ஒரு பக்கம் ரசிகர்களிடம் வசையை கட்டி கொண்டது ஒரு குரூப். பிரபல நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நமீதா, சக்தி வாசு என அவர்களை ரசிகர்களுடன் சக பிரபலங்களே வாரினர். இதனால், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் அந்த பிம்பம் அவர்களை விட்டு இன்னும் நீங்கவில்லை. இதில், ஜல்லிக்கட்டு மூலம் வீரத் தமிழச்சி பட்டம் பெற்ற ஜூலிக்கு கிடைத்த எதிர்ப்பு தனிக்கதை. இவர்கள் யாருமே விஜய் டெலி அவார்ட்ஸுக்கு வரவில்லை. ஏன் வரவும் மாட்டார்கள் என பலருக்கு தெரிஞ்ச சேதி தான்.

oviya

ஆனால், ரசிகர்கள் மனதில் ராணியாக அமர்ந்துள்ள ஓவியாவும் வரவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தும், அந்த நாளில் ஓவியாவிற்கு கேரளாவில் முன்கூட்டியே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததாக அவர் தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.