புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

தேசிய விருது வாங்கிய அஜித் இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்த விஜய்.. காரணம் இதுதான்!

பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் ஒருவருக்கு வெற்றிபடம் கொடுத்துவிட்டால் அதே இயக்குனரை வைத்து மற்றொரு நடிகர் படம் கொடுப்பது சாதாரண விஷயம் தான். அப்படி ஒரு வாய்ப்பு அஜித் பட இயக்குனருக்கும் கிடைத்துள்ளது.

1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று தேசிய விருதையும் வாங்கி கொடுத்த திரைப்படம்.

அதுவரை இல்லாத புதுவிதமான காதல் கதையை அகத்தியன் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு அகத்தியனை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வரிசை கட்டி வந்தனர்.

இவ்வளவு ஏன். தளபதி விஜய் கூட நிறைய முறை அகத்தியனை அழைத்து கதையை கேட்டாராம். இருந்தாலும் அகத்தியனுடன் இணைவதில் தளபதி விஜய்க்கு கொஞ்சம் சங்கடம் இருந்ததாக தெரிகிறது.

அதற்கு காரணம் அந்த காலகட்டங்களில் விஜய் கமர்ஷியல் படங்களை பெரிதும் நம்பியிருந்தாராம். அதன் காரணமாகத்தான் அதிகமாக காதல் படங்களை தேர்ந்தெடுக்கவில்லை என அகத்தியனின் நெருங்கிய உறவினரிடம் விஜய்யே கூறியிருந்தாராம்.

kadhalkottai-agathiyan
kadhalkottai-agathiyan

ஒருவேளை விஜய் மற்றும் அகத்தியன் கூட்டணியில் ஒரு படம் உருவாகியிருந்தால் அது இன்னொரு தேசிய விருதைப் பெற்றிருக்கும் என அப்போதே பல பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

Trending News