Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதெல்லாம் வேணவே வேணாம்.. இயக்குனருக்கு கட்டளையிட்ட விஜய்
தமிழ்சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு மாஸ் காட்சி இருக்க வேண்டுமென இயக்குனர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதுதான் ஒரு ரசிகனுக்கு நிறைவான காட்சி என்பதாலும் அன்று முதல் இன்று வரை மாஸ் படங்களில் மாஸ் காட்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் தளபதி விஜய்யின் படங்களுக்கு அறிமுக காட்சி மட்டுமல்லாது அறிமுகப்பாடல் காட்சியிலும் ஒருவிதமான மாஸ் ஓபனிங் இருக்கும். தற்போது தளபதி விஜய் ஒரே மாதிரி திரைப்படங்களை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பது அவர் அடுத்தடுத்து பணியாற்றும் இயக்குனர்களை பார்த்தாலே தெரிகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் பல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் ஸ்ரீதர். தெறி படத்தில் ஜித்து ஜில்லாடி பாடலுக்கு நடனம் அமைத்திருப்பார். அந்த பாடல் தொடக்கக் காட்சியில் தளபதி விஜய்க்கு பெரிய மாஸ் ஓபனிங் இருக்க வேண்டும் என நினைத்து அதற்கான வேலையில் இறங்கினாராம்.
ஆனால் விஜய் அந்த அளவு எல்லாம் பில்டப் கொடுக்க வேண்டாம் எனவும் சாதாரண ஓபனிங் காட்சி வைத்தாலே போதும் எனவும் கூறியதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இரண்டு படங்களில் நடித்து விட்டாலே தற்போது மாஸ் காட்சிகள் கேட்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் 60 படங்கள் தாண்டியும் பணிவுடன் இருப்பதுதான் விஜய்யை தமிழ் சினிமா இந்த உயரத்தில் வைத்து அழகு பார்க்கிறது என்று சொல்லலாம்.
சில காரணங்களால் விஜய் அஜித் ரஜினி சூர்யா போன்றவர்களால் ஓபனிங் காட்சியை மாஸ் இல்லாமல் செய்ய முடியாது என்பதே உண்மை. அப்படி செய்யவில்லை என்றால் அந்த படம் முதல் காட்சியிலேயே படுத்துவிடும். ரசிகர்கள் விரும்புவதும் மாஸ் தான்.
