எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்த மாஸ்டர் கெட்டப்பில் வந்த தளபதி விஜய்.. வைரலாகும் புகைப்படம்

எஸ் பி பாலசுப்பிரமணியம் இறந்த செய்தி இந்திய சினிமாவையே உலுக்கியுள்ளது. தன்னுடைய கடைசி வீடியோவில் கூட கொரானாவில் இருந்து தப்பித்து விடுவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் பல கோடி மக்கள் கடவுளிடம் வேண்டியும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தற்போது இயற்கை எய்தியுள்ளார்.

இந்நிலையில் எஸ் பி பாலசுப்பிரமணியம், அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் சில படங்களில் நடித்தும் உள்ளார். அவர் நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் தளபதி விஜய்யுடன் நடித்த பிரியமானவளே.

இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் விஜய், எஸ் பி பாலசுப்பிரமணியம் இரங்கலுக்கு வருவாரா என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வைத்திருந்த அதே கெட்டப்பில் தற்போது பாலசுப்பிரமணியத்தின் இறுதி சடங்கிட்கு வந்த விஜய்யின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

vijay-attented-spb-last-funeral
vijay-attented-spb-last-funeral