Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கூட்ட நெரிசலில் ரசிகன் தவறவிட்ட செருப்பை எடுத்துக் கொடுத்த விஜய்.. வைரலாகும் வீடியோ!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள தளபதி விஜய் வந்த புகைப்படம் காலையிலிருந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது.

அதற்கு காரணம், மற்ற நடிகர்கள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து கொண்டு வீட்டிலேயே இருந்த நிலையில் விஜய் நேரில் வந்து இறுதி சடங்குகளில் கலந்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மேலும் விஜய்யின் மீதான மரியாதையை இரட்டிப்பாகியுள்ளது. இந்நிலையில் அதைவிட சுவாரசியமான நிகழ்வு ஒன்றை செய்துள்ளார் தளபதி விஜய்.

தளபதி விஜய் வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் ரசிகர்கள் வழக்கம் போல் கூட்டம் கூடி விட்டனர். இதனால் விஜய் திரும்பி செல்லும்போது நெரிசல் ஏற்பட்டது.

அப்போது காவல் துறையினர்கள் கூட்டத்தை ஒதுக்கும்போது ரசிகர் ஒருவர் வழியில் காலணியை தவறவிட்டுள்ளார். தளபதி விஜய் அந்த செருப்பை எடுத்துக் கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பல்லாயிரம் கோடி பணம் கொடுத்தாலும் அடுத்தவர்கள் செருப்பை தொட யோசிக்கும் உலகில், விஜய் எதார்த்தமாக ரசிகனின் செருப்பை எடுத்துக் கொடுத்தது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களுக்கும் அவரை பிடிக்க வைத்து விட்டது என்றே சொல்லலாம்.

அந்த வீடியோ பார்க்க:- Click here

vijay-spb-cinemapettai

vijay-spb-cinemapettai

Continue Reading
To Top