Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அட்லீ அடுத்த படம் உறுதி! ரசிகர்களுக்கு வருத்தமா?
தெறி மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த அட்லி அடுத்து விஜயை வைத்து என்ன படம் எடுப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஏஜிஎஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் விஜய்யின் 63 வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். இதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் அட்லீக்கு பல கண்டிஷன் போட்டுள்ளார்கள்.

Vijay
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அட்லி, அடுத்த படம் விஜய்யை வைத்து இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது இந்தப் படத்தில் தெறி, மெர்சல் 2 படங்களில் இல்லாத விஜய் இதில் இருப்பார். இந்தப் படத்தின் கதை பழைய படங்களை விட இரண்டு மடங்கு மாஸாக இருக்கும் என்று கூறினார்.
பரத் எனும் நான் திரைப்படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த கியாரா அத்வானி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம். அட்லி மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் உள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன இருந்தாலும்? விஜய் படத்தை அட்லி இயக்கினால் முழு திருப்தி இல்லாத மாதிரியே தோன்றுகிறது. இன்னும் பல இயக்குனர்கள் விஜய்காக இன்னும் காத்துகொண்டிருகிறார்கள் பல வித்தியாசமான கதைகளில். அவர்களையும் விஜய் கண்டுகொள்ள வேண்டும்.
