தெறி படத்துக்கு விஜய் – அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது.

ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஏற்கனவே இயக்குனர்களிடம் படு கறாராக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது மாணவர்கள் தான் ஹீரோ. இனி நடிகர்கள் ஜம்பம் பலிக்காது என்கிற நிலை இப்போது நிலவுவதால் அட்லிக்கு கடும் உத்தரவுகள் போடபபபட்டுளது என்கிறார்கள் கோடம்பாக்கம் சினிமாவினர்.

எப்படியும் ஜெயிக்கணும். மறுபடி இளைஞர்கள் கூட்டம் கூடனும் என்பதே நடிகர்களின் டார்கெட். மாணவர்களே ஓகேவா பாத்துக்குங்க..