பைரவா படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. அச்சம் என்பது மடமையடா படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து அட்லியும் விஜய்யும் ஒருசேர இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.