Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி மற்றும் மெர்சல் மாபெரும் வெற்றி கண்டன. இப்படி இருக்கும் நிலையில் அதே கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் அவருக்கு சர்வதேச சிறந்த நடிகர் என்ற விருது வாங்கி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தது. அந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் இப்படத்திலும் பணிபுரிகின்றனர்.

vijay-atlee
ags கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் தளபதி63 படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், விஜய்காக பாடலாசிரியர் விவேக் எழுதிய ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் உலகளவில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தது. இப்படத்திலும் அவர் பாடல் எழுதுகிறார். இப்படத்தில் எடிட்டராக Antony ரூபன் பணிபுரிகிறார். அனல் அரசு இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
மெர்சல்-லில் ஜிஎஸ்டி பற்றிய வசனங்கள் உலக அளவில் பேசப்பட்டன. இப்படத்திலும் சமூக கருத்துக்கள் கொண்ட வசனங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
