Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அட்லி இணையும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.!
விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்க்கார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.
விஜய் மீண்டும் அட்லியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது, அட்லி இதற்கு முன் விஜய்யுடன் இரண்டு படங்களை இயக்கி மெகா ஹிட் கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும், விஜய் 63 படத்திற்காக ஒரு போட்டோ ஷூட் விரைவில் நடக்க இருக்கிறதாம்.
தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது, இதில் சமந்தாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக படக்குழுவில் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்.
