News | செய்திகள்
விஜய், முருகதாஸ் படத்தின் நாயகி இவர்தானாம்!
ஏ.ஆர். முருகதாஸ், மகேஷ் பாபு பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஃபஸ்ட் லுக் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்கு நடுவில் முருகதாஸ் விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்று உறுதியான தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் படக்குழு இவரை கமிட் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனராம்.
அதிலும் படத்தில் மூன்று நாயகிகள் என்று கூறப்படுகிறது. மற்ற இரண்டு நாயகிகளில் டாப்ஸி, எமி ஜாக்சன் பெயர்களும் அடிபடுகின்றது.
ஆனால் முருகதாஸ், விஜய் கூட்டணி உறுதி என்ற தகவலை தவிர படத்தை பற்றி இன்னும் படக்குழு எதுவும் கூறவில்லை.
