vijay record
vijay

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 61ஆவது திரைப்படமான இப்படத்தை, இளம் இயக்குநர் அட்லீ இயக்குகிறார்..

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படமான மெர்சல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில், மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு, டீசர் வெளியிடப்பட்டது.

இயக்குநர் அட்லியின் பிறந்தநாளையொட்டி, இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு டீசர் வெளியானதிலிருந்து 30 நிமிடங்களுக்குள்ளாக, யூடியூப்பில், 5 லட்சம் முறைக்கு மேல் மெர்சல் டீசரை பார்த்து ரசித்துள்ளனர். சென்னை மக்கள் பேசும் மொழிவழக்கில், ‘மெர்சல்’ என்பதற்கு அச்சதோடு மிரள்வது என்பது அர்த்தமாகும்.

வெளியான ஒரேநாளில் ஒரு கோடி பேர் ‘மெர்சல்’ டீசரை பார்த்தனர். தவிர யூடியூப் லைக்ஸ் ஏழேகால் லட்சம் என உலக சாதனை படைத்தது. இந்தப் படம் தீபாவளிக்கு அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தேனாண்டாள் நிறுவனம், படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய் அப்படிப்பட்டவர் இல்லை,வதந்திகளை நம்பாதீர்கள்- பிரபல நடிகர் மனம் திறந்தார்

இந்த நிலையில் ராஜேந்திரன் என்ற திரைப்பட தயாரிப்பாளர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், ‘நான் ஏற்கெனவே 2014ல் ‘மெர்சலாகிட்டேன்’ என்ற பெயரில் ஒரு படத்தை துவக்கினேன்.

அந்தப்படம் தயாரிப்பில் உள்ள நிலையில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ என்ற படம் வெளிவர உள்ளது. இந்தப்படம் வந்தால் என் படம் பாதிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் அக்டோபர் 3-ம் தேதி ஒத்திவைத்தவர், அதுவரை ‘மெர்சல் படத்தின் விளம்பரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது’ என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதுகுறித்து, ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு தரப்பில் பேசினோம். ‘ஏற்கெனவே காதல், காதலுக்கு மரியாதை, காதல் மன்னன், காதலர் தினம், காதல் வைரஸ், காதல் சடுகுடு, காதலே நிம்மதி… என்று ஒரே வார்த்தைள் பல படங்களில் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் எந்த பிரச்னைகளும் வரவில்லை. ‘மெர்ச’லுக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை?

அதிகம் படித்தவை:  விஜய், அஜித் ரசிகர்களால் பலரின் உழைப்பு வீணாகின்றது- பிரபல இயக்குனர் வருத்தம்

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் அவரது பணிகளை முழுவதுமாக முடித்து விட்டு ஓய்விற்காக பார்சிலோனா பறந்து சென்று விட்டார்.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகயுள்ள இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படத்தில் சமந்தாவின் டப்பிங் மட்டும் நிறைவடையாமல் இருந்து வந்தது, சமந்தா திருமண பிஸியில் இருப்பதால் அவர் வரவில்லை என்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பணியை முடித்து விடலாம் என அட்லீ திட்டம் போட்டுள்ளார்.

இதனை அறிந்த சமந்தா சென்னை விரைந்து வந்து தனது டப்பிங்கை நேற்று முடித்துள்ளார், இந்த செய்தி பார்சிலோனாவில் உள்ள விஜய்க்கு தெரிய அவர் உடனே சமந்தாவை தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.