தெறி விழா மேடையில் நடந்த தவறுக்கு வருந்துகிறேன் – விஜய் அறிக்கை

vijay-theriஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தெறி.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது.

விழாவில் நேற்று பேசிய விஜய், ரசிகர்களுக்கு ஒரு குட்டிக்கதை சொன்னார். அதில் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மாவோ என தவறுதலாக கூறினார். இதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்தனர். இந்த செய்தி விஜய்யின் பிஆர்ஓ., மூலம் ரசிகருக்கு தெரியவர, உடனே தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய் கூறியுள்ளதாவது… ”பெரிய மேடைகளில் நாம் சில கருத்துக்களை ரசிகர்களுக்காக சொல்லும் போது இந்த மாதிரியான தவறுகள் நடந்து விடுகிறது. இதற்காக நான் வருந்துகிறேன். மற்றபடி நான் சொன்ன கருத்துக்கள் மக்களை சென்றடையும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: