அருவி இயக்குனருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி.. பொலிட்டிகல் திரில்லர் சக்தி திருமகன் டீசர் எப்படி இருக்கு.?

shakthi thirumagan
shakthi thirumagan

Shakthi Thirumagan Teaser: அருவி படம் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அருண் பிரபு தற்போது விஜய் ஆண்டனியை வைத்து சக்தி திருமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இது விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம் என்பதும் கூடுதல் சிறப்பு.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில், செல் முருகன், திருப்தி, கிரண் என பலர் நடித்துள்ளனர். பொலிட்டிகல் திரில்லர் கதையாக இது உருவாகி இருக்கிறது.

இதுவரை கிரைம், மிஸ்ட்ரி படங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி இதன் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுப்பார் என தெரிகிறது. அதன்படி டீசரின் காட்சிகள் ஒவ்வொன்றும் வெறித்தனமாக இருக்கிறது.

சக்தி திருமகன் டீசர் எப்படி இருக்கு.?

இதன் ஆரம்பத்திலேயே கருப்பு சட்டை தாடியுடன் சந்திரசேகர் வருவது பெரியாரை நினைவு படுத்துகிறது. அதை தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் ஊழல், தொடர் குற்றங்கள் என அடுத்தடுத்து காட்டப்படுகிறது.

இதில் கிட்டு என்ற கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அப்பாவி, ஆக்சன் ஹீரோ என டீசரில் அவருடைய வெரைட்டியான முகம் தெரிகிறது.

அதனால் நிச்சயம் படம் வேற லெவலில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் இந்த கூட்டணி வெற்றி பெறும் என வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Advertisement Amazon Prime Banner