Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னையா பிளாப் ஹீரோன்னு சொன்னீங்க! கைவசம் 10 படங்களை வைத்து மிரட்டும் விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் விஜய் ஆண்டனி. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவரது திரைப்படங்கள் எளிமையான கதையை கொண்டு உருவாக்கியதால் ரசிகர்களுக்கு பிடித்தது.
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி நடித்த நான் என்ற முதல் படமே பெரிய ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.
அதிலும் பிச்சைக்காரன் படம் தெலுங்கில் மட்டுமே 50 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதால் தற்போது தெலுங்கிலும் கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி.
ஆனால் சமீப காலமாக தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி, அண்ணாதுரை, திமிரு புடிச்சவன் போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையில் கொலைகாரன் எனும் வெற்றி படத்தை கொடுத்தார்.
அதன் விளைவு தற்போது 10 படங்கள் கைவசம் உள்ளதாம். காக்கி, தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதுமட்டுமில்லாமல் விஜய் மில்டன், ஆனந்த கிருஷ்ணன், பாலாஜி கே குமார் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜூலை 24ஆம் தேதி வெளிவரும் என தெரிகிறது.
சினிமா படம் இனிமேல் தயாரிப்பார்களா என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் 10 படங்கள் கைவசம் வைத்துள்ளதால் விஜய் ஆண்டனியை பார்த்து மிரண்டு போயுள்ளதாம் கோலிவுட்.
