fbpx
Connect with us

Cinemapettai

நிஜ பிச்சைக்காரர்களுடன் நடித்த அனுபவம் – விஜய் ஆண்டனி

News | செய்திகள்

நிஜ பிச்சைக்காரர்களுடன் நடித்த அனுபவம் – விஜய் ஆண்டனி

vijay-antonyநடிகராகவும் வெற்றி கண்டுவரும் விஜய் ஆண்டனி அடுத்த படம் பிச்சைக்காரன். இப்படம் வருகிற மார்ச் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் படம் ஒரு பணக்கார மனிதனின் வாழ்க்கையை பற்றி படம், இதில் ஒரு சில இடங்களில் நிஜத்தில் பிச்சை எடுத்துள்ளேன், மேலும் பல நிஜ பிச்சைக்காரர்களுடன் பேசி அவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து உள்ளேன்.பிச்சைக்காரர்கள் பல பேர் பிறந்ததிலிருந்து பிச்சை எடுப்பது இல்லை, உறவுகளால் கைவிடப்பட்டு வேறு வழியில்லாமல் இந்த வேலை செய்கின்றனர்.

மேலும் நான் பேசிய ஒரு பிச்சைக்காரர் ஒருவர் குழந்தையை பிச்சை எடுத்து படிக்கவைக்கிறார்.பிச்சைக்காரர்களில் சில பேர் ஹீரோவாக திகழ்கின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க பிச்சைக்காரர்கள் பற்றிய படம் அல்ல, ஜனரஞ்சமான ஒரு படம். மேலும் இப்படத்தின் கதையை கேட்டு நான் கதறி கதறி அழுதேன் அந்தளவுக்கு தாக்கம் இப்படத்தில் உள்ளது என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top