vijay-antony

கந்த சஷ்டி கவசத்தை இசையமைப்பாளர் தேவா டூயட்டாக மாற்றிய போதும் கூட இப்படிதான். இந்து மதத்தை தேவா கேவலப்படுத்துகிறார் என்றார்கள். நல்லவேளை… தேவா மிகச்சிறந்த அம்மன் பக்தர். அதனால் தப்பித்தார். ஆனால் விஜய் ஆன்ட்டனி வேறு மதமல்லவா? அதனால் பேஸ்புக்கில் கிளம்பியிருக்கும் இந்த புகார், அவ்வளவு சீக்கிரம் அணையப் போவதில்லை.

சென்னையில் வசிக்கும் வெங்கட் ராமன் என்பவர் தனது முகப்புத்தகத்தில் சில விஷயங்களை எழுதியிருக்கிறார். விஜய் ஆன்ட்டனியின் சைத்தான் படத்தின் ட்ரெய்லரில் வரும் பின்னணி இசையில் வேத மந்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது கொச்சைப்படுத்துப்பட்டுள்ளதாகவும் குமுறியிருக்கிறார்.

அவரது பதிவு அப்படியே இங்கே-

இன்று செய்திகளை வலைதளத்தில் வாசித்துக்கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை காண நேர்ந்தது. அது விரைவில் வெளியாக உள்ள நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் படம் “சைத்தான்” (Shaitan) ட்ரைலர். அந்த ட்ரைலரின் பின்னணி இசை தைத்திரீய உபநிஷத (வேத) மந்திரத்துடன் சேர்ந்து வருகிறது.

அந்த மந்திரத்தை எந்த அளவுக்கு கெடுக்க முடியோமோ அந்த அளவுக்கு கெடுத்து அந்த ட்ரைலர் காட்சிகளின் இசைக்கேற்ப பின்னால் இழைய விடுகிறார் அந்த படத்தின் இசை அமைப்பாளர் / கதாநாயகர் விஜய் ஆண்டனி. அந்த மந்திரத்தில் கடைசியில் வரும் “சன்னோ விஷ்ணு ருருக்ரம:” என்ற மந்திரத்தை “விஷ்ணு சைதானே” என்று ஒலிக்கும்படி செய்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  மீண்டும் புது ஹீரோயினுக்கு வாய்ப்புக் கொடுக்கும் விஜய் ஆண்டனி..

என்ன கொடுமை இது? எதற்கு இப்படி ஒரு அக்கிரமம் செய்கிறீர்கள்? இந்த செயலை எப்படி வகை படுத்துவது? உங்களை எப்படி வகைபடுத்துவது? பையித்தியம் என்றா? அல்லது மத வெறி என்றா? அல்லது மத தீவிரவாதி என்றா? இல்லை போலி ஜன நாயகம் பேசும் பொய்யர்கள் கூட்டம் முழங்கும் கருத்து சுதந்திரம் என்றா? உங்களுக்கு என்ன பிரச்சனை? இந்த செயல்களுக்கு பின்னால் யார் உள்ளார்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? அந்தணனின் அழிவா அல்லது ஒட்டு மொத்த இந்து மதத்தின் வீழ்ச்சியா?

நீங்கள் யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள் அல்லது வணங்காமல் இருங்கள் ஆனால் மற்றவர்கள் வணங்கும் ஒரு தெய்வத்தை இப்படி தரக்குறைவாக பேச, பரப்ப உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? இது தான் ஜனநாயகமா?

உங்களுக்கு இந்த மந்திரத்தின் பொருள் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்….

“மித்ரன் நமக்கு நன்மை செய்யட்டும், வருணன் நமக்கு நன்மை செய்யட்டும், அர்யமான் நமக்கு நன்மை செய்யட்டும், இந்திரனும் ப்ரஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்யட்டும், எங்கும் நிறைந்தவராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும். பிரம்மனை (பரப்பொருளை) வணங்குகிறேன், நீயே கண்கண்ட தெய்வமாக இருக்கிறாய். கண்கண்ட தெய்வம் என்று போற்றுகிறேன்”.

அதிகம் படித்தவை:  சூப்பர் ஸ்டார் படத்தையே பின்னுக்கு தள்ளிய பிச்சைக்காரன்

பொருள் புரிந்ததா?

பரம்பொருள் எங்கும் நிறைந்துள்ளது அதனால் எல்லாம் இறைவனே என்று ஒரு ஹிந்து சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்கிறான். அவனுக்கு என் கடவுள் மட்டுமே கடவுள் மற்ற மதங்களின் கடவுளர் சைத்தான் என்ற எண்ணம் இல்லை. உங்களுக்கு ஏன் இந்த எண்ணம் வருவதில்லை? ஏன் நீங்கள் மனத்தால் விரிவடைய மறுக்கிறீர்கள்? ஏன் உங்களுக்கு பரந்த மனப்பான்மை வரமறுகிறது? உங்கள் அன்பு ஏன் சிறுத்து இருக்கிறது. நாங்கள் இந்துவாக பிறந்ததிலும், வாழ்வதிலும் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் ஏனெனில் நாங்கள் யாரையும் வெறுப்பது இல்லை. எங்கள் அன்பும், தொண்டும் அனைவருக்குமானதாக பரந்த இதயத்துடன் உள்ளது. ஏனெனில் நாங்கள் இறைவனை எல்லாவற்றிலும் பார்க்கிறோம். அதனால் எங்களை இளிச்சவாயர்கள், ஏமாந்த சோணகிரிகள் என்று எண்ணிவிடவேண்டாம்.

தயவு செய்து இந்த புனிதமான வேத மந்திரங்களை இப்படி தரக்குறைவாக உபயோக படுத்துவதை நிறுத்துங்கள். மத காழ்ப்புணர்ச்சியை, மத வெறியை, மத மோதல்களை தயவு செய்து தூண்டாதீர்கள். தயவு செய்து அன்பை விதையுங்கள் அன்பை அறுவடை செய்யுங்கள்…வெறுப்பை விதைத்து வெறுப்பை அறுவடை செய்யாதீர்கள். மேலும் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்காதீர்கள். அனைவரையும் ஒற்றுமையுடன் வாழவிடுங்கள்.

 

Source: New Tamil Cinema