முதல் பாக மேஜிக் விஜய் ஆண்டனிக்கு கை கொடுத்ததா.? பிச்சைக்காரன் 2 எப்படி இருக்கு? முழு விமர்சனம்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. அதை தொடர்ந்து இன்று வெளிவந்துள்ள பிச்சைக்காரன் 2 கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது முதல் பாகம் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்ததா என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

முதல் பாகத்தில் அம்மா மகன் சென்டிமென்டை காட்டி நம்மை உருக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த இரண்டாம் பாகம் அப்படியே உல்டாவாகி அண்ணன், தங்கை சென்ட்டிமென்டாக காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் இப்படத்தில் இதுவரை நாம் பார்க்காத மூளை மாற்று கதைகளம் காட்டப்பட்டிருக்கிறது.

Also read: பிச்சைக்காரனா இல்ல மொக்கைக்காரனா.? அனல் பறக்கும் விஜய் ஆண்டனி பட ட்விட்டர் விமர்சனம்

கதைப்படி விஜய் குரு மூர்த்தியாக வரும் விஜய் ஆண்டனி இந்திய பணக்காரர்களிலேயே முக்கியமானவராக இருக்கிறார். அவரிடம் ஒரு லட்சம் கோடி பணம் இருக்கிறது. அதை அடைய நினைக்கும் அவரின் நண்பர்கள் தேர்ந்தெடுக்கும் வழி தான் மூளை மாற்று அறுவை சிகிச்சை. அதாவது விஜய் ஆண்டனியின் மூளைக்கு பதில் வேறொருவரின் மூளையை வைத்து விட்டால் அதன் பிறகு தங்கள் இஷ்டப்படி அவரை ஆட்டி வைக்கலாம் என்பதே அவர்களின் எண்ணம்.

அதைத்தொடர்ந்து சத்யாவாக வரும் மற்றொரு விஜய் ஆண்டனியின் மூளையை விஜய் குருமூர்த்திக்கு மாற்றுகின்றனர். இதில் தங்கையை தொலைத்த அண்ணனாகவும், கொலைகாரராகவும் இருக்கும் சத்யா விஜய் குருமூர்த்தியின் மூளையாக எவ்வாறு செயல்படுகிறார் என்றும், அவருடைய எண்ணம் ஈடேறியதா என்பதும் தான் இப்படத்தின் கதை.

Also read: தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்.. பிச்சைக்காரன் 2-வை டீலில் விட்ட விஜய் ஆண்டனி

முதல் பாதி புது கதையாக இருக்கிறதே என நம்மை வியக்க வைத்தாலும் இரண்டாம் பாதியில் வழக்கமான கதையாக நகர்வது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதிலும் அண்ணன், தங்கை சென்ட்டிமென்ட் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக இருக்கிறது. முதல் பாகத்தில் பணக்காரர் தன் அம்மாவுக்காக பிச்சைக்காரனாக மாறுவது போல் காட்டப்பட்டிருக்கும்.

அதையே இந்த பாகத்தில் பிச்சைக்காரனாக இருப்பவர் பணக்காரனாக மாறுவது பற்றியும், ஆன்ட்டி பிகிலி பற்றியும் கூறி இருக்கிறார்கள். இது சுவாரசியத்தை கொடுத்திருந்தாலும் இரண்டாம் பாதி முழுவதும் ஹீரோவுக்கான பில்டப்புகள் அதிகமாக இருப்பது தொய்வை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று ஹீரோயினுக்கும் பெரிதாக படத்தில் வேலை இல்லை.

Also read: ருத்ர தாண்டவத்திற்கு தயாரான விஜய் ஆண்டனி.. பட்டையை கிளப்பும் பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்

மேலும் மிக நீளமான காட்சிகளும், நட்பு, துரோகம், பாசம் என கலவையான உணர்வுகளும் ஒரு குழப்பத்தை கொடுக்கிறது. ஒரே பாதையில் பயணிக்காமல் கதை வேறு வேறு கோணத்தில் பிரிவதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த வகையில் ஓவர் பில்டப் கொடுத்த விஜய் ஆண்டனி கதையை பொறுத்த அளவில் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆக மொத்தம் இந்த பிச்சைக்காரன் 2 மொக்கைக்காரனாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்