Tamil Cinema News | சினிமா செய்திகள்
வித்தியாசமான டைட்டிலுடன் வெளியான விஜய் ஆண்டனியின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. இது வேற ரகம்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் நடிகர்கள் மிக குறைவு. அதிலும் வெற்றி பெறும் நடிகர்கள் என்று பார்த்தால் அதை விட குறைவுதான்.
ஆனால் வித்தியாசமான படங்களில் நடித்து அதையும் வெற்றிப் படமாகக் கொடுத்து தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.
தொடர்ந்து ஒரு சில தோல்விப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் வித்தியாசத்திற்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் நடித்துவருகிறார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன்.
கோடியில் ஒருவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. வழக்கம் போல் தன்னுடைய பட தலைப்புகளில் வித்தியாசம் காட்டும் விஜய் ஆண்டனி இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
படத்தின் தலைப்புக்கு ஏற்ப கோடியில் ஒருவன் படமும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கும் என நம்பலாம்.

vijayantony-kodiyil-oruvan
