Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு பிடிச்சவன் படத்தில் இணைந்த பிரபல நடிகை யார் தெரியுமா.!

விஜய் ஆண்டனி தற்பொழுது காளி படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார் இந்த படத்தின் சூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்துள்ளது மேலும் இந்த படத்தில் சுனைனா,அம்ரிதா,ஷில்பா மஞ்சுநாத் என நான்கு நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
காளி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இதனை சமீபத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்கள் விஜய் ஆண்டனி நம்பியார் படத்தை இயக்கிய கணேசா தான் இந்த படத்தை இயக்கிருக்கிறார். மேலும் இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கவுள்ளது அதுமட்டும் இல்லாமல் இந்தபடத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
திமிரு பிடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார், நிவேதா பெத்துராஜ் நடித்த டிக் டிக் டிக் படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது, அதற்கடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திலும் நடித்துள்ளார் அதுவும் தயாராகி வருகிறது அதுமட்டும் இல்லாமல் தற்போது எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். திமிரு பிடிச்சவன் படம் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
