எப்போதுமே வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் ஆண்டனி. கதை மட்டுமில்லாமல் பட பெயரும் இப்படி ஒரு பெயரா என்று கேட்கும் அளவிற்கு தான் இருக்கும்.

அண்ணாதுரை என்ற படத்தில் நடித்துவரும் விஜய் ஆண்டனி அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

தற்போது விஜய் ஆண்டனி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தான் நடிக்க இருக்கும் படத்திற்கு காளி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், விஜய் ஆண்டனி பிலிம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இப்பட வேலைகள் அண்ணாதுரை படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தொடங்க இருக்கிறார்.