விஜய் ஆண்டனி என்றல் இசையமைப்பாளர் என்பது தெரியும் ஆனால் சமிபகாலமாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் அவர் நடிக்கும் படம் அனைத்தும் இசையை விட ஹிட் அடித்து வருகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட இருக்கிறார்.இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையால் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்தாரோ தற்போது அதைவிட அதிகமாகவே நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் சூப்பர் ஹிட்டானது. தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’, ‘எமன்’ படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கில் இவரது படங்களுக்கு வரவேற்பு பெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘அண்ணாதுரை’ படம் உருவாகி வருகிறது.இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, செப்டம்பர் 5ம் தேதி வெளியிட இருக்கிறார். இப்படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.