விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி ரிலீசுக்கு ரெடியாக உள்ள படம் ‘காளி’. இப்படத்தினை தொடர்ந்து விஜய் ஆண்டனி தான் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் என்பதை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அம்மா கிரியேஷன்ஸ்

சினிமா வட்டாரங்களில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா மிகவும் பிரபலமானவர். தெய்வ வாக்கு, சின்ன மாப்பிளை, மாணிக்கம், அரவிந்தன், சரோஜா, அரவான், கடவுள் இருக்கான் குமாரு போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது இவர் நிறுவனம். வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படம் அடுத்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இவர்கள் நிறுவனத்தின் 23 வது படத்தில் தான் ஹீரோவாகிறார் நம் விஜய் ஆண்டனி.

Amma Creations
இயக்குனர் நவீன்

நம் பசங்க பாண்டியராஜ் அவர்களின் உதவியாளர் மற்றும் ‘மூடர்கூடம்’ படத்தை இயக்கிய நவீன் தான் சிவா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்கப்போகிறாராம். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. இப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது என்பதையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். மேலும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நடித்து வந்தவர் முதல் முறையாக வெளி தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளது, கோலிவுட்டில் அனைவரையும் ஆச்சிர்யப்படுத்தியுள்ளது.