இசை அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி இன்று தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகன் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்றுள்ளன.

நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக எமன் எனும் படம் வெளியாகவுள்ளது. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியிலும் இவரது படங்கள் வெற்றி பெருகின்றன.

இவரது அடுத்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு “அண்ணாதுரை” என்று பெயரிட்டுள்ளனர். தமிழகத்தின் திராவிட கட்சி தலைவரின் பெயர் என்பதால் சர்ச்சை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக படக்குழுவினர் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்ணாதுரையை பின்பற்றும் கட்சி தலைவர்களிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.