Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-antony

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹிட்டு கொடுக்க வேற வழி தெரில குமாரு.. சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் விழுந்த விஜய் ஆண்டனி

வேட்டைக்காரன், வேலாயுதம் போன்ற பெரிய நடிகர் விஜய்யின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி(vijay antony). அந்த சமயத்தில் தொடர்ந்து இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அறிமுகமாக அவருக்கும் அந்த ஆசை வந்ததில் தப்பில்லையே.

இருந்தாலும் மற்றவர்களை போல ஏனோதானோ என்று படம் நடிக்காமல் ஆரம்பத்திலேயே அக்கறையாக சினிமா நல்ல கதையை தேர்ந்தெடுத்து நான் எனும் படத்தில் நடித்தார்.

ஆரம்பமே அட்டகாசமாக தொடங்கிய விஜய் ஆண்டனியின் தொடர்ந்து சலீம், சைத்தான், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற தரமான படங்களை கொடுத்தார்.

அதிலும் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் செம வரவேற்பு கிடைத்து 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தற்போது தெலுங்கிலும் அவரது படங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

ஆனால் சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் தற்போது தன்னுடைய சூப்பர் ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது ஆர்வமாக இருக்கிறாராம்.

இயக்குனர் சசி தான் முதல் பாகத்தை இயக்கியிருந்தாலும் இரண்டாம் பாகத்துக்கான கதையை விஜய் ஆண்டனி தயார் செய்து இருக்கிறாராம். மேலும் சசி பிஸியாக இருப்பதால் பிச்சைக்காரன் படத்தை விஜய் ஆண்டனி இயக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

Continue Reading
To Top