vijay

’எமன்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

’பிச்சைக்காரன்’ படத்திலிருந்து விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், தொடர்ந்து அவர் படங்கள் தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது.

vijay antony

அந்த வரிசையில் ’அண்ணாதுரை’ திரைப்படமும் ‘இந்திரசேனா’ என்கிற பெயரில் தெலுங்கில் டப் செய்து ரிலீஸாகவுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .

அதிகம் படித்தவை:  நேரடியாக இரு மொழிகளில் தயாராகும் விஜய் படம்!

பிரபல இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகும்  ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடித்து வரும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காளி’ படத்திலும் நடித்துவருகிறார்.

antony

இந்த இரண்டு படங்களும் தனக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். இந்த இரண்டு படங்களும் முடிவடைந்த பிறகு சீமான் இயக்கத்தில்நடிக்கவிருக்கிறார் விஜய் ஆண்டனி.

அதிகம் படித்தவை:  ஒரே நாளில் மோதும் தல-தளபதி ?

சீமான் எழுதிய ‘பகலவன்’ கதையில் சில வருடங்களுக்கு முன் இளைய தளபதி விஜய் நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ பின்னர் பகலவன் படம் கைவிடப்பட்டது.

Vijay_Antony

அந்த கதையைத்தான் சமீபத்தில் விஜய் ஆண்டனியிடம் சொல்லி கால்ஷீட் வாங்கியுள்ளாராம் சீமான். இளைய தளபதி விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த விஜய் ஆண்டனி சில வருடங்களுக்கு முன் அந்த வீட்டை விலைக்கு வாங்கினார்.

இளைய தளபதி விஜய் நடிக்க விருந்த கதையில் தற்போது நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி.