Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோடியில் ஒருவன் டீசர்.. அனல் பறக்கும் போஸ்டருடன் வந்த விஜய் ஆண்டனி
விஜய் சேதுபதிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படம் வைத்து ஹீரோவாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர்கள் நடிகரானால் தப்பில்லை என உண்மையில் ரசிகர்களை உணர வைத்தவர் விஜய் ஆண்டனி தான்.
வித்தியாசமான கதை தேர்வுகள், வெரைட்டியானா டைட்டில்கள் என ரசிகர்களை முழு திருப்தியுடன் தியேட்டரை விட்டு அனுப்புவதில் விஜய் ஆண்டனி கில்லாடிதான். இருந்தாலும் எல்லோருக்கும் மாஸ் ஹீரோ ஆசை எட்டிப்பார்க்கும் அல்லவா.
அப்படி விஜய் ஆண்டனி மாஸ் ஹீரோவாக நடித்து ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியதால் தற்போது அப்படியே தன்னுடைய ரூட்டை மாற்றி பழையபடி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துவிட்டார்.
அந்த வகையில் அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற ஜனவரி இரண்டாம் தேதி கோடியில் ஒருவன் டீசர் வெளியாக உள்ளதாம்.

kodiyil-oruvan-teaser
இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. விஜய் ஆண்டனி படங்களின் டைட்டில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். எடுத்துக்காட்டாக பிச்சைக்காரன், சைத்தான், எமன் போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.
கடந்த சில படங்களாக விஜய் ஆண்டனியின் தொடர் தோல்விகளை கொடுத்த நிலையில் கண்டிப்பாக கோடியில் ஒருவன் படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
