ஒரு புறம் அர்ஜுன் – மறுபுறம் விஜய் ஆண்டனி. வைரலாகுது கொலைகாரன் படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

விஜய் ஆண்டனி

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என்று வித்தியாசமான தலைப்பில் தான் இதுவரை இவர் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த வரிசையில் இவர் நடிக்கும் படம் தான் கொலைகாரன்.

கொலைகாரன்

Kolaikaran

இப்படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . இவர் இதற்கு முன் “லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார். அஷிமா நர்வால் , சீதா, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் பிரதீப் தயாரிக்கிறார். விரைவில் பாடல்கள் ரிலீசாகும் என்ற தகவலுடன் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

flp

இதற்கு முன்பே ஷூட்டிங் துவங்கும் சமயத்தில் போஸ்டர் வெளியானது. எனினும் கதாபாத்திர கெட் அப்புடன் தற்பொழுது வெளியாகி உள்ளது.

Leave a Comment