ரஜினி நடித்த ‘காளி’ தலைப்புக்கு நடிகர் விஜய் ஆண்டனியும், ஸ்டண்ட் நடிகர் ஒருவரும் போட்டி போட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் ஆண்டனி ‘எமன்’ படத்தை அடுத்து ராதிகாவின் ராடண் மீடியா தயாரிப்பில், சீனிவாசன் இயக்கும் ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், அந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் ‘காளி’ என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

‘காளி’யின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் துவங்குகிறது. இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் விஜய் ஆண்டனி நடிக்கிறார் இந்த ‘காளி’ படத்துக்கு இவரே இசையமைக்கிறார்.

1980ல் இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் ரஜினி நடித்த படம் தான் ‘காளி’. ‘காளி’ பட தலைப்பை விஜய் ஆண்டனி தனது படத்திற்கு சூட்டியுள்ள இந்த நேரத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவரும் தன்னுடைய படத்துக்கு ‘காளி’ என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும் படத்தின் பர்ஸ்ட்லுக்குடன் அண்மையில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். ஆகையால் ‘காளி’ என்ற தலைப்பு யாருக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.