Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி65 படத்தின் இயக்குனரை அறிவிக்கப் போகும் விஜய்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது யாரை?
தற்போது தமிழ் சினிமா உலகமே அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான். சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட பேச்சுக்களை மேடையில் பேசுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதைவிட பெரிய எதிர்பார்ப்பு மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை தான். இதை ஒரு பட்டிமன்றமே போட்டு பேசி விடலாம் போல. அந்த அளவுக்கு இதுவரை இவ்வளவு இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டதே இல்லையாம்.
கிட்டதட்ட 10 க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ள விஜய் புதிதாக யாருடனாவது இணைவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே இயக்கிய இயக்குநர்கள் வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள்.
அதற்கு ஏற்றாற்போல் முதல்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மற்ற படங்களின் எந்த ஒரு சாயலும் இல்லாமல் தனித்துவமாக இருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் விஜய் சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் சுதாவின் கதை விஜய்க்கு பிடிக்கவில்லை போல. தற்போது மீண்டும் முருகதாஸுடன் இணைந்து துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளாராம்.
இது எந்த அளவு உண்மை என்பதை மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளான மார்ச் 15-ம் தேதி வெளியிட இருப்பதாக விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாத்தி கமிங் என்ற தர லோக்கல் குத்து பாடல் என்று இணையதளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களாகிய நீங்கள் இயக்குனர்களாக எதிர்பார்க்கிறீர்கள்?
