fbpx
Connect with us

Cinemapettai

9 வருடத்திற்கு முன் விஜய் படத்தை வைத்து மோசடி செய்த பிரபல தயாரிப்பாளர்.. பிரச்சனை முற்றியதால் கடுப்பில் தளபதி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

9 வருடத்திற்கு முன் விஜய் படத்தை வைத்து மோசடி செய்த பிரபல தயாரிப்பாளர்.. பிரச்சனை முற்றியதால் கடுப்பில் தளபதி

தொடர்ந்து சில வருடங்களாகவே தளபதி விஜய்யின் பழைய பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு விஜய்க்கு நிறைய சங்கடங்களை கொடுத்து வருகிறது.

மெர்சல் படத்தின் வெளியீட்டில் கூட அந்த படத்தில் பணியாற்றிய மேக்கப் மேனுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்க வில்லை என்ற பிரச்சனையில் விஜய் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டது.

தற்போது குரானா பிரச்சனையில் அக்கடா என இருக்கும் தளபதி விஜய்யை அவருடைய பழைய படத்தை வாங்கி விநியோகம் செய்த தயாரிப்பாளர் ஒருவர் கடுப்பேற்றி உள்ள விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சார்லி சாப்ளின் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சக்தி சிதம்பரம். இயக்குனராக மட்டுமல்லாமல் படம் வாங்கி விநியோகம் செய்யும் வேலையும் செய்துள்ளார்.

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு தளபதி விஜய், அசின் நடிப்பில் உருவான காவலன் படத்தை வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டவர் இவர்தான். அந்த படத்திற்கு சில அரசியல் காரணங்களால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வசூல் செய்யவில்லை. இந்நிலையில் அட்வான்ஸ் வாங்கிய பணத்தை அப்படியே ஆடையை போட்டு விட்டாராம் சக்தி சிதம்பரம். நீண்ட நாட்களாக உரசிக்கொண்டிருந்த இந்த பிரச்சனை தற்போது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இந்த விஷயம் தளபதி விஜய்யின் காதுக்கு செல்லவே செம கடுப்பில் இருக்கிறாராம். இனி விஜய்யின் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நேரடியாக தியேட்டர்களுக்கு படத்தை விநியோகம் செய்யுங்கள் என்ற கோரிக்கையை வைக்க உள்ளாராம் தளபதி.

Continue Reading
To Top