Connect with us

Cinemapettai

தெறி படத்துக்கு பிறகு விஜய்க்கும் கலைப்புலி தாணுவுக்கும் இதுதான் பிரச்சனையாம்.. அதான் கால்சீட் தரலையா?

vijay-kalaipuli-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தெறி படத்துக்கு பிறகு விஜய்க்கும் கலைப்புலி தாணுவுக்கும் இதுதான் பிரச்சனையாம்.. அதான் கால்சீட் தரலையா?

தளபதி விஜய்க்கு தெறி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் கலைப்புலி எஸ் தாணு. புலி என்ற மிகப்பெரிய தோல்வி படத்திற்கு பின்னர் வந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விஜய்யின் மார்க்கெட்டை டாப்பில் தூக்கி வைத்தது.

மணிரத்தினம் இயக்கிய சத்ரியன் படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆகி அட்லீ இந்த படத்தை இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

அவ்ளோ பெரிய வெற்றி படத்தை கொடுத்த கலைப்புலி தாணுவுக்கு மீண்டும் தளபதி விஜய் கால்ஷீட் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இருவருக்குள்ளும் ஒரு கருத்து வேறுபாடு நிலவி விட்டதாம்.

கலைப்புலி தாணு எப்பவுமே தன்னுடைய படங்களில் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால் தனக்கு தேவை என்றால் மற்றவர்களுக்கு பணத்தாசை காட்டி அள்ளிக் கொடுத்து வாங்கி விடுவார்.

அந்த வகையில் தளபதி விஜய் சமீபத்தில் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம். கதையெல்லாம் கேட்டு ஓகே பண்ணிய பின்னர் வெற்றிமாறன் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா படத்தை இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை அறிந்து தளபதி விஜய் தான் அவருக்கு போன் செய்து வெற்றிமாறன் என்னுடைய படத்தை இயக்கி விட்டு வாடிவாசல் படத்திற்கு அனுப்பி வைக்கட்டுமா என கேட்டுள்ளார். ஆனால் தாணு கமிட்மெண்ட் கொடுத்து விட்டேன் என அதையும் இதையும் சொல்லி தட்டிக் கழித்து விட்டாராம்.

மேலும் தளபதி விஜய் முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி65 படத்திற்கு துப்பாக்கி படத்தின் டைட்டிலை கேட்டதற்கும் இதே பதில்தானாம். இதனால் டென்ஷனான விஜய், இனி எப்படி என்னிடம் கால்சீட் வாங்குகிறீர்கள் என்று பார்க்கிறேன் என சொல்லி விட்டாராம்.

தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் மிகவும் டேஞ்சரான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top