Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் ரிலீஸ் தேதியை உளறிய அனிருத்.. கடுப்பான விஜய்
தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
மேலும் கத்தி படத்திற்கு பிறகு அனிருத் இசை அமைப்பதால் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியது. சமீபத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய குட்டிக்கதை பாடல் உலகம் முழுவதும் வைரல் ஆனது. தற்போது வரை குட்டிக்கதை பாடல் 27 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து டப்பிங் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு முடியும் முன்னரே தளபதி விஜய் டப்பிங் பணியை தொடங்கி விட்டார் என செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் என படம் ஆரம்பிக்கும் முன்னரே முடிவு எடுக்கப்பட்டது. இருந்தாலும் படத்தை ஒரு வாரம் முன்னாடியே களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதை உறுதி செய்யும் வகையில் அனிருத் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது படக்குழுவினர் இடையே சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் அறிவிக்கலாம் என காத்துக் கொண்டிருந்ததாகவும் அதற்குள் அவசரப்பட்டு அனிருத் உளறி விட்டதால் அவர் மீது கடுப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படமும் கிட்டத்தட்ட அதே தேதியில்தான் வெளியாக உள்ளதால் இந்த கோடை விடுமுறையில் மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
