அண்மையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விஜய்யின் 61வது படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் மீது விஜய் கடும் கோபத்தில் உள்ளாராம். அதாவது இன்னும் விஜய், அட்லீ கதைக்கு முழுமையாக ஓகே சொல்லவில்லையாம்.

அதோடு விஜய்யின் ஆசை இசையமைப்பாளரான ஜி. வி. பிரகாஷிற்கு பதிலாக அவர்கள் ஏ.ஆர். ரகுமானை கமிட் செய்துள்ளனர்.

விஜய்யின் ஒரு அறிவிப்பும் இன்றி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பல முடிவுகளை எடுத்து வருவதால் கடும் கோபத்தில் உள்ளாராம் விஜய்.