இறங்கிவர நினைத்த விஜய்.. பிடிக்காததை மறுபடியும் செய்யும் எஸ்ஏசி!

தமிழகத்தில் தளபதி விஜய்க்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருப்பதால் அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு, அவரும் அதைதான் ஆசைப்படுகிறார் என அரசியல் வல்லுனர்களும் பத்திரிக்கையாளர்களும் கணித்தனர். விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக விஜய்யின் அனுமதியின்றி மாற்றி பதிவு செய்ததால் தந்தையென பார்க்காமல் தளபதி விஜய் முதல் ஆளாக தடை போட்டார்.

தன்னுடைய அரசியலில் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மூக்கை நுழைப்பது விஜய்க்குப் பிடிக்காததால், தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என அவருக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றார். விஜயின் இத்தனை செயல்பாட்டிற்கும் மூளையாக செயல்பட்டவர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்.

இவர் விஜய்யின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல் புதுச்சேரியின் எம்எல்ஏ-வாக இருந்தவர். முதலில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக எஸ்ஏ சந்திரசேகர் இருந்தபோது அவரால் அந்த இயக்கத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் தான் புஸ்ஸி ஆனந்த். அதன் பிறகு இவருக்கும் விஜய்க்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது.

பிறகு எஸ்ஏசி அரசியலில் நுழைய விரும்பியதால், விஜயுடன் இயக்கத்தை இணைத்து விஜய் தலைமைக்கு மாற்றி, அதன்பிறகு முழு பொறுப்பாளராக தன்னை மாற்றிக்கொண்ட திறமைசாலி தான் புஸ்ஸி ஆனந்த். இதனால் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பை எப்படியாவது துண்டிக்க வேண்டும் என அப்பா எஸ்ஏசி விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும், எல்லாம் இயக்குனர்களிடமும் ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார்.

ஆகையால் அப்பா என்பதால் அவர் செய்வதை விஜய் இடமே கொண்டுபோய் சேர்க்க சிலர் தயங்குகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் எஸ்ஏசி இறங்கி இந்த வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதனால் சில காலமாக தந்தை-மகன் உறவுக்கு இடையே பிரச்சினை இருந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் தந்தையுடன் சகஜமாக பழகலாம் என நினைக்கும் விஜய்க்கு இந்த சம்பவம் தெரிந்ததும் மேலும் மனவருத்தத்தை தூண்டுகிறது என்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்