Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெற்றிமாறன், விஜய் இணையும் படத்தின் நாவல் இதுதான்.. மிரட்டல் கதையில் முரட்டு தோற்றத்தில் தளபதி!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கூட்டணி என்றால் அது தளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையும் படம் தான்.
அந்தக் கூட்டணி அமைய இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தாலும் தற்போதே அந்த படத்தை பற்றிய பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதற்கு அந்த படத்தின் கதைக்களம் தான் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம். நாவல் கதைகளை வைத்துக் கொண்டு படம் இயக்குவதில் வல்லவர் வெற்றிமாறன்.
அடுத்ததாக சூரி நடிக்கவிருக்கும் படத்தை அஜ்னபி எனும் நாவலை தழுவியும், சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை வாடிவாசல் எனும் நாவலை தழுவியும் தான் எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த இரண்டு படத்தையும் முடித்த பிறகு தளபதி விஜய்யுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார் வெற்றிமாறன். அந்த படத்தின் கதை கருட புராணம் எனும் நாவலில் இருந்து ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்க உள்ளதாம்.
வில்லத்தனம் கலந்த முரட்டு கதாபாத்திரமாம் அது. அதற்காக தளபதி விஜய் தனது உடல் எடையை கூட்டி முறுக்கேறிய உடல் அமைப்புடன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் வெற்றிமாறன் வட்டாரத்திலிருந்து இந்த செய்தி கசிந்துள்ளது. இருந்தாலும் இருவரும் இணையும் படம் இந்த மாதிரி கதையாக இருக்கும் என்பதை ரசிகர்கள் வேறு ஒரு கோணத்தில் கூட எதிர்பார்க்கலாம்.
அதற்காக தளபதி ரசிகர்கள் கருடன் என்ற பெயரில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கி இணையத்தில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

vijay-garudan-cinemapettai
