விஜய், திரிஷா சம்பளம் மட்டும் இவ்வளவா.? நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றிய ஜோடி

Vijay : விஜய், திரிஷா ஜோடிக்கு கில்லி படம் தொடங்கி தற்போது வரை மவுசு இருக்கிறது. சினிமாவை பொருத்தவரையில் சில நடிகர், நடிகைகளின் கெமிஸ்ட்ரி காலம் காலமாக பேசப்பட்டு வரும்.

அந்த வகையில் கில்லி, குருவி போன்ற படங்களைத் தொடர்ந்து கடைசியாக திரிஷா, விஜய் இருவரும் லியோ படத்தில் நடித்திருந்தனர். இப்போது திரிஷா கோலிவுட்டில் நிறைய படங்களை வைத்திருக்கிறார்.

இதுவரை நயன்தாரா நம்பர் ஒன் இடத்தில் இருந்த நிலையில் அவரை ஓரம் கட்டி விட்டார் திரிஷா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளார் திரிஷா.

கமலின் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் திரிஷாவுக்கு 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. மேலும் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடித்த வருகிறார். கோட் படத்திலும் இவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 69 இல் விஜய்யின் சம்பளம்

விஜய்யின் கோட் படத்திற்குப் பிறகு தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் விஜய்யின் கடைசி படமாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் வெற்றிமாறன், அட்லீ, வினோத் போன்ற இயக்குனர்களின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் எச் வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கு மட்டும் விஜய்க்கு 250 கோடி சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. அதன் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி முதலிடத்தில் இருக்கிறார்.

 

Next Story

- Advertisement -