நடிகர் விஜய் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நடிகர் மற்றும் மாபெரும் நடிகரும் கூட,விஜய் படம் என்றால் திரையில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் அதேபோல் வசூலும் அள்ளி குவிக்கும். அதே போல் தான் மகேஷ்பாபுவும் மிகவும் மாஸ் நடிகர் விஜய்க்கு குறையாமல் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.spyder teaser

மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்பைடர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தாகூர் மது தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

‘ஸ்பைடர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.

சில நாட்கள் வெளியீடு என்பதால் எனது இதயதுடிப்பு எனக்கே கேட்கிறது. என்னுடைய சக்தி ஏற்றார்போல் முழுமையாக இப்படத்துக்காக உழைத்திருக்கிறேன். வித்தியாசமாக கதை சொல்ல வேண்டும் என்று தான் இக்கதையைத் தொடங்கினேன்.

ஒரு படத்தை இயக்கும் போதே, முதல் ரீல் முடியும்போது மக்கள் என்ன குறுந்தகவல் அனுப்புவார்கள் என்று ஒவ்வொரு ரீலுக்கும் யோசித்து படம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே இப்படத்தை கூடுதல் பொறுப்போடு இயக்கியுள்ளேன்.

மகேஷ்பாபுவோடு படம் இயக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசைப்பட்டேன். அவருக்கென்று தனித்துவமான சில விஷயங்கள் உண்டு. அவரிடம் ஹீரோயிசம் இருக்கும், அதுவே யதார்த்தமாக இருக்கும். அது ரொம்ப பிடித்திருந்தது. கதைக்குள் இருக்கும் ஹீரோயிஸத்தை அழகாக வெளிப்படுத்திக் கொடுப்பார்.

தெலுங்கில் படம் செய்ய வேண்டும் என்ற போது, தமிழில் படம் செய்தாலே டப் செய்யப்படுகிறதே என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தெலுங்கில் படம் இயக்கி நீண்டகாலமாகிவிட்டது என்பதால் நேரடியாக தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் செய்யலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு மகேஷ்பாபு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்.இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக படக்குழுவினர் அனைவரையும் பாராட்டிப் பேசினார். மேலும் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

“விஜய் – மகேஷ்பாபு இருவரும் இணைந்தால் அப்படத்தை இயக்குவீர்களா?” என்ற கேள்விக்கு “இருவருமே ஹீரோயிசத்தை மிக அழகாக மேம்படுத்திக் கொடுப்பார்கள். இருவருமே நடந்து வரும் காட்சியில் கூட, மிக அழகாக ஹீரோயிசத்தோடு வெளிப்படுத்துவார்கள். தமிழ் – தெலுங்கு என இருமொழி நாயகர்களும் இணைந்தால் வடமொழி நடிகர்களின் படங்களைவிட வியாபாரம் அதிகம்.

தெலுங்கில் விஜய் சாருக்கு 2 பாடல்கள் அதனை அங்குள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விஷயத்தைப் பார்க்க வேண்டும். தமிழில் மகேஷ்பாபுவுக்கு 2 பாடல்கள் வைத்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி இருவரும் இணைந்தால் அப்படத்தை இயக்க நான் தயார்” என்று பதிலளித்தார்.